நெடுஞ்சாலைகளில் அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களை பரிசோதனை செய்ய மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் புகைப் பரிசோதனைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு, கொழும்பு – கண்டி வீதியின் கடவத்த பகுதியில் வீதியில் பயணித்த 65 வாகனங்களை பரிசோதித்த போது கடும் கரும் புகையுடன் கூடிய 20 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதிக புகையினால் ஏற்படும் சூழல் பாதிப்பை தடுப்பதும், அதிக எரிபொருள் பயன்பாட்டால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பை குறைப்பதும் இந்த ஆய்வின் நோக்கம் என்று புகைப் பரிசோதனைப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, அவ்வாறான வாகனங்களை பழுதுபார்ப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றன. எதிர்காலத்தில் உரிய முறையில் பழுதுபார்க்கப்படாத வாகனங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.