சானியா மிர்சா விவாகரத்து உண்மையா?.. ஷாக் கொடுக்கும் புது அப்டேட்.!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு மகன் பிறந்தார். இருவரும் வெவேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தங்கள் நாடுகளின் சார்பாக தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். சுமார் 12 வருடங்களாக திருமண பந்தத்தில் இருந்த இந்த தம்பதிகள், தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாக சமீபத்தில் தீவிரமாக செய்திகள் பரவியது.

அந்த செய்திகள் உண்மை எனும் வகையில் சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன..அல்லாவைக் நாடி..” என்று பதிவிட்டு இருந்தார். சோயிப் மாலிக் உடனான கருத்து வேறுபாடு காரணமாகவே இப்படி மறைமுகமாக பதிவிட்டு இருப்பதாக கூறப்பட்டது. மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் சோயப் மாலிக், அதில் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு சானியா மிர்சாவுக்கு துரோகம் செய்து விட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டன.

அந்தவகையில் சோயிப் மாலிக் – சானியா மிர்சா ஜோடி விரைவில் தங்கள் விவாகரத்தை வெளிப்படையாக அறிவிக்கப்போவதாகவும், இந்த ஜோடி பல்வேறு ஷோக்களில் ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாலும், சட்ட சிக்கல்கள் காரணமாகவும் வதந்திகளுக்கு பதில் அளிக்கவில்லை என்றும், சட்ட சிக்கல்கள் தீர்ந்த பிறகு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பற்றி அறிவிக்கக்கூடும் என்று பாகிஸ்தானின் ‘Geo News’ சமீபத்தில் செய்தி வெளியிட்டது.

துப்பாக்கிச்சூடு எதிரொலி; இம்ரான் கானுக்கு கூடுதல் கமாண்டோ படை பாதுகாப்பு

இந்தநிலையில் இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சோயப் மாலிக் – சானியா மிர்சா இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் வெளியாகிவரும் ஓடிடி தளமான உருதுபிலிக்ஸின் ‘தி மிர்சா மாலிக் ஷோ’ நிகழ்ச்சியில், ஜோடிகள் இருவரும் இணைந்து கலந்து கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.