இஸ்தான்புல்:துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்திக்லால் பகுதி மக்கள் அதிகம் கூடும் பகுதியாகும். இப்பகுதியில் வெளிநாட்டினர் அதிகம் வசித்து வருகின்றனர். பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இப்பகுதிக்கு வருகை தருவர். இந்நிலையில் இன்று (14ம்தேதி) சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில்10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகவலை அந்நாட்டு டி.வி.,நிறுவனம் தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement