'ஆர்ஆர்ஆர்' இரண்டாம் பாகம்: ராஜமவுலி புதிய தகவல்
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிப்பில் இந்த ஆண்டில் வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படம் 'ஆர்ஆர்ஆர்'.
இப்படத்திற்கு எப்படியும் ஆஸ்கர் விருதுகளை வாங்க வேண்டும் என படத்தை அமெரிக்காவில் திரையிட்டு, அங்கு அதற்கான புரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார் ராஜமவுலி. இடையில் ஜப்பான் நாட்டிற்கும் சென்று அங்கு நடந்த பட வெளியீட்டு நிகழ்வுகளில் பங்கு கொண்டுவிட்டு மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு சிகாகோவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசுகையில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். படத்திற்கான கதை விவாதம் நடந்து வருவதாகக் கூறியுள்ளார். கதை எழுதும் பணியில் தனது அப்பா விஜயேந்திர பிரசாத் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
'பாகுபலி 2'ம் பாகம் முதல் பாகத்தை விட அதிகம் வசூலித்தது. எனவே, 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விடவும் பிரம்மாண்டமாக உருவாக்கி இரு மடங்கு வசூலைப் பெறவும் வாய்ப்புள்ளது.