சென்னை: குழந்தைகள் நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் ‘குழந்தைகள் நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கென பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குழந்தைகளின் மனநலன், உடல்நலன் சார்ந்தவற்றில் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எந்தக்குழந்தையும் பசியோடு வகுப்பறையில் அமர்ந்திருக்கக்கூடாது என்பதே அரசின் இலக்கு’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.