கர்நாடகாவில் விற்கப்படும் தங்க இழை பூசப்பட்ட தோசை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சோதையில் ஏராளமான வகைகள் உள்ளன. ஒவ்வொருவரும் வேறுமாதிரியான ரசனை கொண்டவர்கள் என்பதால் பல வகையான தோசைகள் விற்கப்படுகின்றன. முன்பெல்லாம் மசாலா தோசை, ஆனியன் தோசை என்று சிறியதாக இருந்த பட்டியல் இப்போது நீண்டு விட்டது.
மட்டன் தோசை, காளான் தோசை என்று வெஜ் மற்றும் நான்-வெஜ்ஜில் ஏரானமான தோசை வகைகள் உள்ளன. அந்த வகையில் தற்போது தங்க தோசை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கர்நாடகாவில் தும்கூர் நகரில் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஓட்டலில் ஒரு தோசை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்படி என்ன அந்த தோசையில் இருக்கிறது என்று கேட்பவர்கள் ஆச்சர்யம் அடைவார்கள்.
தோசை சுடும்போதே அதன் மேல் 24 காரட் தங்கம் முலாம் பூசப்பட்ட மெல்லிய தாள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. தினமும் 20 தங்க மசால் தோசைகள் விற்பனை செய்யப்படுவதாக கூறும் ஓட்டல் நிர்வாகம், தங்க தோசையை சாப்பிட பலரும் ஆர்வம் காட்டுவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
newstm.in