நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகின் மூலமான மின் உற்பத்தி நாளைய தினம் மீண்டும் தேசிய மின்கட்டமைப்பில் இணைப்பதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் திருத்த பணிகள் காரணமாக இதன் மின் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டிருந்தது
திருத்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இதற்கமைய 300 மொகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் ஒன்றிணைக்கப்படவுள்ளது. இதன்படி, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் ஊடாக 300 மொகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இதேவேளை, சப்புஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று எரிசக்தி மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்து வரும் இரண்டு தினங்களில் மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்ததும் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
.இந்த கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் எரிபொருளுக்காக இலங்கை அரசாங்கம் ஏழு கோடி டொலரை செலவிட்டுள்ளது.