இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன
சம்பவ இடத்தில் இருந்த உள்ளூர்வாசிகள், காவல்துறை, துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினருடன் அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்
துருக்கியின் இஸ்தான்புல்லில் பொதுவெளியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்தான்புல் நகரின் பரபரப்பான நடைபாதையில், மாலை 4.20 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
இதில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Loud blast heard in Istanbul’s Istiklal causing panic. pic.twitter.com/ZK6FViRooz
— Ted Regencia تِد (@tedregencia) November 13, 2022
அத்துடன் 53 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் எதையும் உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் இது தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Social Media
துருக்கி ஜனாதிபதி எர்டோகன், இது கொடூரமான தாக்குதல் என்றும், இதற்கு காரணமானவர்களை தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Reuters
AFP
Reuters