மாலைதீவின் தலைநகர் மாலே நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கிய மூன்று இலங்கையர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மோட்டார் வாகன திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையத்திலேயெ இந்த சம்பவம் கடந்த பத்தாம் திகதி இடம்பெற்றது. இந்த அனர்த்தத்தில் சிக்கிகுண்ட மூன்று இலங்கையர்களையும் பாதுகாப்பாக காப்பாற்றக்கூடியதாக இருந்ததாக மாலைதீவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் 9 இந்தியரகள் மற்றும் பங்காளாதேஷத்தைச் சேர்நத ஒருவர் அடங்களாக 10 பேர் உயிழந்தமை குறிப்பிடத்தக்கது.