சூரியன் பிறந்து 460 கோடி ஆண்டுகள் ஆகும் நிலையில், எரிந்துகொண்டிருக்கும் அந்த நட்சத்திரம் எப்போது சாகும் என தெரியுமா?
இது குறித்து விஞ்ஞானிகளுக்கு ஒரு பதில் கிடைத்துள்ளது.
சுமார் 460 கோடி (4.6 பில்லியன்) ஆண்டுகள் பழமையான நமது சூரியன், பூமியின் வானிலை, பருவம், காலநிலை மற்றும் கடல் நீரோட்டத்தை இயக்குகிறது மற்றும் தாவரங்களில் ஒளிச்சேர்க்கையை அனுமதிப்பதன் மூலம் நமது கிரகத்தில் உயிர்கள் வாழ அனுமதிக்கிறது.
ஆர்வத்தை தூண்டும் பெரிய நட்சத்திரம்
GettyImages
நமது கிரகத்தை ஆளும் இந்த பெரிய நட்சத்திரத்தின் தோற்றம், பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவை பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளை ஆர்வமாக வைத்துள்ளன.
காலநிலை மாற்றம் மற்றும் கிரகத்தின் பேரழிவுகள் பற்றிய தற்போதைய விவாதத்துடன் , மற்ற நட்சத்திரங்களைப் போலவே சூரியனும் எப்படி, எப்போது வெடித்து இறக்கும் என்பதை அறிவதில் விஞ்ஞானிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சூரியனின் உருவானது எப்போது, எப்படி?
நேஷனல் ஜியோகிராஃபிக் அறிக்கையின்படி , சூரியன் கிட்டத்தட்ட 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஹீலியம் மற்றும் ஹைட்ரஜனால் ஆன ஒரு மூலக்கூறு மேகத்திலிருந்து உருவாகத் தொடங்கியது.
சூரியனுக்கு அருகாமையில் உள்ள ஒரு சூப்பர்நோவா ஒரு அதிர்வு அலையை உமிழ்ந்ததால், அது இந்த மேகத்துடன் தொடர்பு கொண்டு அதை சார்ஜ் செய்து, சூரியனைப் பெற்றெடுத்ததாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
GettyImages
சூரியனின் அழிவு
பூமியில் இருந்து சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில், சூரியன் இன்னும் 500 கோடி (5 பில்லியன்) ஆண்டுகளில் இறக்கக்கூடும் என்று சயின்ஸ்அலர்ட் அறிக்கை தெரிவித்துள்ளது.
“சூரியன் சிவப்பு ராட்சதமாக மாற உள்ளது” என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.
அதாவது “நட்சத்திரத்தின் (சூரியனின்) மையப்பகுதி சுருங்கிவிடும், ஆனால் அதன் வெளிப்புற அடுக்குகள் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதை தூரத்திற்கு விரிவடையும், அப்படி விரியும்போது நமது கிரகத்தை (பூமியை) மூழ்கடிக்கும். அதுவரை பூமி உயிருடன் இருந்தால்” என்று கூறுகின்றனர்.
Pixabay
சூரியன் எப்படி சாகும்? பிறகு என்னவாகும்?
மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 2018-ல் நடத்திய ஆய்வில், சூரியன் 90% நட்சத்திரங்களைப் போல சுருங்கி ஒரு வெள்ளைக் குள்ளமாக மாறி, இறுதியில் ஒரு கிரக நெபுலாவாக மாறக்கூடும் என்று கண்டறியப்பட்டது.
ஆய்வறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் இயற்பியலாளர் ஆல்பர்ட் ஜிஜ்ல்ஸ்ட்ரா (Albert Zijlstra), ஒரு நட்சத்திரம் இறக்கும் போது “வாயு மற்றும் தூசி நிறைந்த” உறையை (envelope) வெளியேற்றுகிறது என்று விளக்கினார்.
“உறை நட்சத்திரத்தின் பாதி நிறை இருக்கும்,” என்று அவர் கூறினார்.
“இது நட்சத்திரத்தின் மையத்தை வெளிப்படுத்துகிறது, இந்த நேரத்தில் நட்சத்திரத்தின் வாழ்க்கையில் எரிபொருள் தீர்ந்து, இறுதியில் அணைக்கப்பட்டு இறுதியாக இறக்கும்” என்று அவர் கூறினார்.
Credit: NASA, ESA, C.R. O’Dell (Vanderbilt University), and M. Meixner, P. McCullough)
நட்சத்திரத்தின் சூடான மையமானது நெபுலாவை கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளாக பிரகாசமாக ஒளிரச் செய்கிறது, இது வானவியலில் குறுகிய காலமாகும். “இதுதான் கிரக நெபுலாவைக் காண வைக்கிறது.”
இந்த உறை அதன் தீவிர பிரகாசம் காரணமாக கோடிக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து பார்க்க முடியும், Zijlstra விளக்கினார்.