ராஜஸ்தானில், 10 லட்சம் ரூபாயுடன் ஏ.டி.எம். இயந்திரத்தை அலேக்காக பெயர்த்து எடுத்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தின் தபோக் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளியை மிரட்டி சிறை வைத்தனர்.
பின்னர், ஏ.டி.எம் இயந்திரத்தை மொத்தமாக பெயர்த்து அங்கிருந்து எடுத்துச் சென்றனர். அதில் 10 லட்சம் ரூபாய் இருந்ததாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் தபோக் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.