கண்பார்வை குறைபாடு என்பது ஒரு சமயத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் நிலையில் தற்போதெல்லாம் சிறுவர்,சிறுமியர் கூட பாதிக்கப்படுகின்றனர்.
செல்போனை அதிகம் பார்ப்பது, தவறான உணவுப்பழக்கம் போன்றவை தான் கண்பார்வை குறைப்பாட்டிற்கு காரணம்.
உங்கள் கண்களின் ஆரோக்கியம் மேம்படவும் கண் பார்வைத்திறன் அதிகரிக்கவும் உதவும் உணவுகள் குறித்து காண்போம்.
healthgrades
முருங்கைக்கீரையும்,பொன்னாங்கண்ணிக்கீரையும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகச் சிறந்த மருந்துகளாகும். கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்தும், அமினோ அமிலங்களும் இந்த கீரைகளில் நிரம்பியுள்ளன
கேரட்டில் கண்களுக்கு ஆரோக்கியம் தரும் பீட்டா கரோட்டினும், வைட்டமின் ஏ சத்தும் நிரம்பியுள்ளன. எனவே கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவது கண் பார்வையை அதிகரிக்கவும், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மிகவும் உறுதுணையானது.
சிட்ரஸ் வகை பழங்களான திராட்சை பழம், ஆரஞ்சு பழம், எழுமிச்சை பழம் ஆகிய மூன்று பழங்களும் உங்கள் கண்களின் விழித்திரையை ஆரோக்கிய படுத்துவதற்கு மிகவும் உதவுகிறது.
பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ சத்து அதிக அளவில் உள்ளது. இது உங்கள் கண் பார்வை ஆரோக்கியத்திற்கு பெரிதும் பங்களிக்கிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது கண்களில் ஏற்படும் விழி புள்ளி சிதைவு பிரச்சனையை கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் உதவுகிறது.
healthline