ஓடும் ரயிலில் இருந்து விழுந்த மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹிரா ரெயின் (32) என்ற நபர் தன் மனைவி ஜரீனா, தன் 3 வயது குழந்தை, மைத்துனர் ஃபிரோஸ் ஆகியோருடன் டெல்லியிலிருந்து பீகாருக்கு, ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், இருக்கை கிடைக்காததாலும், கதவின் அருகிலேயே குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர். மிர்ஜாமுராட் காவல் வட்டத்துக்கு உட்பட்ட பஹெடா ஹால்ட் அருகே ரயில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ரயிலில் உள்ள கதவின் ஓரத்தில் அமர்ந்திருந்த குழந்தை வெளியே விழுந்திருக்கிறாள். குழந்தை கீழே விழுந்ததைப் பார்த்து துடிதுடித்துப் போன தந்தை, தன் குழந்தைதை காப்பாற்ற வேண்டும் என நினைத்து கீழே குதித்திருக்கிறார்.
இதைப் பார்த்த மனைவி ஜரீனா அலறவே….பக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ரயிலில் உள்ள அவசர சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தியிருக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், இருவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டு இருப்பதாகவும், இது குறித்து உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.
குழந்தையும், தந்தையும் ஒரே சமயத்தில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.