வாகன சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி இன்று (14) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
பற்றாக்குறையாக இருந்த 5 இலட்சம் அட்டைகள் அச்சிடும் உரிமத்திற்காக கடந்த 8ஆம் திகதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தற்காலிகமாக வழங்கப்பட்ட சாரதி அனுமதி பத்திரத்திற்கு பதிலாக பதிதாக சாரதி அனுமதி பத்திரம் அச்சிடப்பட்டு வழங்கப்படும்