மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்கும் சம்பவம் ஆங்காங்கே நடைபெறுவது வழக்கம். அதிலும் பொக்லைன் எந்திரத்தை வைத்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தின் தபோக் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இங்கு வந்த மர்ம கும்பல் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலாளியை மிரட்டி அவரை கட்டிப்போட்டனர். அதன் பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை மொத்தமாக அங்கிருந்து பெயர்த்து எடுத்து எஸ்கேப் ஆனார்கள்.
திருடிச் செல்லப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் மொத்தம் ரூ.10 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தபோக் போலீசார் விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது போய் தற்போது ஏ.டி.எம். எந்திரத்தையே பெயர்த்து எடுத்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.