கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே இரணியல் தாந்தவிளை பகுதியைச் சேர்ந்த வடிவேல் முருகன் என்பவருக்கு சுஜா என்ற பெண்ணுடன் இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவரும் அன்னியோன்யமாக மகிழ்ச்சியுடன் தான் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
திடீரென்று வடிவேல் முருகன் சமீபத்தில் மயக்கம் போட்டு நிலை தடுமாறு கீழே விழுந்தார். அதன் பின் உடல்நல குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகைய சூழலில், சில நாட்களாக மனைவியின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கணவர் வடிவேல் முருகன் அவருடைய செல்போன் வாட்ஸ் அப்பை எடுத்து சோதனை செய்துள்ளார். அப்பொழுது, மனைவிக்கு வேறொரு நபருடன் தகாத உறவு இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தனக்கு அவர் ஸ்லோ பாய்சன் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் தனது மனைவி மீது புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் சுஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் அவரை தேடியும் வருகின்றனர்.