ஆஸ்கார் விருதுக்கு தேர்வான 'ஜாய்லேண்ட்' பாகிஸ்தான் திரைபடத்துக்கு தடை

இஸ்லாமாபாத்

ஆஸ்கார் விருதுக்கு பாகிஸ்தான் சார்பில் ‘ஜாய்லேண்ட்’ என்ற படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஜாய்லேண்ட்’ படத்திற்கு ஆகஸ்ட் 17 அன்று பாகிஸ்தான் அரசால் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இருப்பினும் இந்த் திரப்படம் குறித்து பாகிஸ்தானில் சர்ச்சைக்கள் கிளம்பின. சமீபத்தில் அதன் கதை குறித்து ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. இந்த திரைப்படத்தை தடை செய்ய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு கோரிக்கைகள் குவிந்தன. நவம்பர் 11 அன்று வெளியிட்ட அறிவிப்பில், நாட்டின் “சமூக விழுமியங்கள் மற்றும் தார்மீக தரங்களுடன்” இந்த திரைப்படம் ஒத்துபோகவில்லை என்று அமைச்சகம் கூறியது.

கண்ணியம் மற்றும் ஒழுக்க கேடுகளை விளைவிக்கும் மிகவும் ஆட்சேபனைக்குரிய விஷயங்கள் படத்தில் இருப்பதாக எழுத்துப்பூர்வ புகார்கள் பெறப்பட்டன.அதனால் இந்த திரைப்படம் தடை செய்யப்படுவதாக கூறியது.

நவம்பர் 18 ஆம் தேதி பாகிஸ்தானில் இத திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது.

‘ஜாய்லேண்ட்’ ஒரு ஆணாதிக்க குடும்ப கதைபற்றியது. குடும்ப பாரம்பரியத்தை தொடர ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஏங்குகிறது. அதே நேரத்தில் அவர்களின் இளைய மகன் ரகசியமாக ஒரு சிற்றின்ப நடன அரங்கில் சேர்ந்து ஒரு திருநங்கையிடம் மயங்குகிறான் இது தான் கதை.

ஜாய்லேண்ட்’ புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் பாகிஸ்தான் திரைப்படமாகும், அங்கு அது அன் செர்டெய்ன் ரிகார்ட் ஜூரி பரிசு மற்றும் குயர் பாம் விருதை வென்றது. இப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா மற்றும் பூசன் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.இது ஆசியா பசிபிக் திரை விருதுகளின் இளம் சினிமா விருதை வென்று உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.