ஸ்விட்சர்லாந்து,
ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பில்லி ஜீன் கோப்பை டென்னிஸ் தொடரில் சுவிட்சர்லாந்து மகளிர் அணி வெற்றி வாகை சூடியது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியுடன் சுவிட்சர்லாந்து மகளிர் அணி மோதியது.
இதில் முதல் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை ஜில் டெய்ச்மேன், ஆஸ்திரேலிய வீராங்கனை ஸ்டோர்ம் சேன்டர்ஸை 6க்கு 3, 4க்கு 6, 6க்கு 3 என்ற செட் கணக்கில் வென்றார்.
இதேபோல், பெலிந்தா பென்சிக் 6க்கு 2, 6க்கு 1 என்ற செட் கணக்கில் அஜ்லாவை வீழ்த்தினார். இதன்மூலம், 2க்கு பூஜ்யம் என்ற கேம் கணக்கில் சுவிட்சர்லாந்து மகளிர் அணி கோப்பையைக் கைப்பற்றியது.
Related Tags :