கடற்கரையில் கிடைத்த கூழாங்கல்லை பாக்கெட்டில் வைத்திருந்த பிரான்ஸ் நாட்டவர்: திடீரென தீப்பிடித்ததால் அதிர்ச்சி


பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கடற்கரையில் கிடந்த அழகான கூழாங்கல் ஒன்றைக் கண்டெடுத்தார்.

சிவப்பு நிறக் கூழாங்கல்

Benoît Mabire என்பவர் தன் மனைவி பிள்ளைகளுடன் Normandyயிலுள்ள கடற்கரை ஒன்றிற்குச் சென்றுள்ளார்.

அப்போது, அழகான சிவப்பு நிறக் கூழாங்கல் ஒன்றை அவர் கண்டெடுத்துள்ளார். அதை அவரது மனைவி தண்ணீரில் கழுவிக் கொடுக்க, அதை வேறு சில கூழாங்கற்களுடன் சேர்த்து தனது கோட் பாக்கெட்டில் வைத்திருக்கிறார் Benoît.

திடீரென தீப்பிடித்த கோட் பாக்கெட்

சிறிது நேரத்தில் தனது பாக்கெட்டிலிருந்து புகை வருவதைக் கண்ட அவர் பதறிப்போய் கோட்டைக் கழற்றியபோதுதான், அவர் பாக்கெட்டில் போட்ட அந்த ’கூழாங்கல்’தான் பிரச்சினைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

உண்மை என்னவென்றால், Benoît கூழாங்கல் என்று எண்ணி எடுத்து தன் கோட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டது, இரண்டாம் உலகப்போர்க்கால வெள்ளைப் பாஸ்பரஸ் ஆகும். இந்த வெள்ளை பாஸ்பரசை திரவம் ஒன்றில்தான் போட்டு வைத்திருப்பார்கள். அதை வெளியே எடுத்து, அது உலர்ந்தாலே தானே தீப்பிடித்துக்கொள்ளும் குணமுடையது வெள்ளை பாஸ்பரஸ்

கடற்கரையில் கிடைத்த கூழாங்கல்லை பாக்கெட்டில் வைத்திருந்த பிரான்ஸ் நாட்டவர்: திடீரென தீப்பிடித்ததால் அதிர்ச்சி | A Frenchman In His Pocket

 Pic: Keith Heaton / Shutterstock

Benoîtஇன் மனைவி தண்ணீரில் கிடந்த அந்த பாஸ்பரஸ் துண்டை கழுவிக் கொடுக்க, அவர் அதை பாக்கெட்டில் போட்டதால் அது உலர, பாக்கெட்டிலிருந்த மற்ற கூழாங்கற்கள் உரசியதால் வெப்பம் உருவாக, பாஸ்பரஸ் தீப்பிடித்து எரியத் துவங்கியுள்ளது.

Benoît இன் கைகளிலும் கால்களிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்தக் கடற்கரைக்குச் செல்வோர் கூழாங்கற்கள் என்று நினைத்து பாஸ்பரசை எடுத்து தன்னைப்போல ஆபத்தில் சிக்கிக்கொள்ளவேண்டாம் என எச்சரித்துள்ளார் அவர்.

இந்த வெள்ளை பாஸ்பரஸ், இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது மஞ்சள் நிறக் கூழாங்கற்கள் போல காட்சியளிக்கலாம். அவை போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளின் எச்சங்களாக இருக்கலாம்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.