ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியாவுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசியா நாட்டுக்கு  பிரதமர் மோடி இன்று புறப்பட்டுச் செல்கிறார்.

பாலியில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர், மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்  உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.   

ஜி 20 அமைப்புக்கு அடுத்த ஓராண்டுக்கு இந்தியா தலைமை தாங்க உள்ளது. இதற்கான பொறுப்பு, மாநாட்டின்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

மாநாட்டில் பேசுகையில், உணவு பாதுகாப்பு,  கொரோனாவுக்குப் பிந்தைய உலக பொருளாதார நிலை, உக்ரைன் போர் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி  வலியுறுத்துவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.