கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை, அவரின் பெற்றோர் விசாரணைக்கு ஒப்படைக்கவில்லை என்று, காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மாதம் 26 ஆம் தேதிகூட மாணவியின் செல்போனை யாரோ பண்படுத்தியுள்ளார்கள் சென்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால், செல்போனை ஒப்படைக்க வேண்டும் என்று, மாணவியின் பெற்றோருக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இது சம்பந்தமான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிபிசிஐடி போலீசார் தரப்பில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த விசாரணை அறிக்கையில், பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டதாக 214 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக இதுவரை அவர்களின் பெற்றோர் ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில், செல்போனை ஒப்படைத்தால்தான் விசாரணை நடத்த முடியும் என்று எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து நீதிபதி அவர்கள், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய செல்போனின் உரையாடல்கள் விசாரணைக்கு அவசியம். நியாயமான விசாரணை நடைபெற வேண்டுமென்றால், மாணவி பயன்படுத்திய செல்போனை பெற்றோர்கள் ஒப்படைக்க வேண்டும். செல்போனை ஒப்படை த்த பின்னர், அதனை ஆய்வு செய்து சிபிசிஐடி போலீசார் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.