புதுடில்லி: 2022 ம்ஆண்டிற்கான மத்திய அரசின் விளையாட்டு விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைக்குளுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் விளயைாட்டு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. இதன் படி 2022 ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 25 பேருக்கு அர்ஜூனா விருதுகள் இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை ஜானதிபதி மாளிகையில் வரும் 30-ம் தேதி நடக்கவுள்ள விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவிக்கிறார்.
அதன் விவரம்:
கேல்ரத்தனா விருது;
1) சரத்கமல் (டெபிள் டென்னிஸ்) மேஜர் தியாந்த்சந்த் கேல் ரத்னா
அர்ஜூனா விருது:
1) பிரக்ஞானந்தா (செஸ்),
2) இளவேனில் (துப்பாக்கிச்சுடுதல்)
3) சீமா பூனியக( தடகளம்)
4) லக் ஷாயாசென் (பேட்மின்டன்)
5) பிரனாய் (பேட்மின்டன்)
6) தீப்கிரேஸ் எக்கா (ஹாக்கி)
7) எல்தோஸ் பால் (தடகளம்)
8) ஸ்ரீ அமித் (குத்துச்சண்டை)
9) மிகத் ஷாரின் (குத்துச்சண்டை)
10)பக்தி பிரதீப் குல்கர்னி (செஸ்)
11) சுசீலா தேவி (ஜூடோ )
12) ஷாக்சி குமாரி (கபடி)
13) நயன்மோனி சாயித்தியா (லான்போல்)
14) சாகர் கைலாஷ் வோஹால்கர் ( மல்லாகம்ப் )
15) ஓம்பிரகாஷ் மிதர்வால் (துப்பாக்கிச்சுடுதல் )
16) ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ் )
17) விகாஷ் தாக்குர் (பளு தூக்குதல் )
18) அன்ஷூ (மல்யுத்தம் )
19) சரிதா (மல்யுத்தம்)
20) ஸ்ரீபர்வீன் (உஷூ)
21) மனாஷி கிரிஸ்சந்திரா ஜோஷி (பாரா பேட்மின்டன் )
22) தருண் தில்லான் ( பாரா பேட்மின்டன் )
23) சொப்னி சஞ்சய் பாட்டீல் (பாரா நீச்சல் )
24) ஜெர்லின் அனிகா (டெப் பேட்மின்டன்
25) அபினாஷ் முகுந்த் சாபில் ( தடகளம் )
துரேணாச்சார்யா விருது:
1)ஜவான் ஜோத்சிங்தேஜா (வில்வித்தை )
2) முகமது அலி காமர் (குத்துச்சண்டை)
3)சுமா சித்தார்த் சிரு (பாரா துப்பாக்கிச்சுடுதல் )
4)சுஜித் மான் (மல்யுத்தம்)
வாழ்நாள் சாதனையாளர் விருது:
1)ஜஹகர்லாத் (கிரிக்கெட்)
2)விமல் பிரபுல்லா கோஷ் (கால்பந்து)
3)ராஜ்சிங் (மல்யுத்தம்)
தியாசந்த்
1)அஸ்வினி அக்குஜி (தடகளம் )
2) தரம்வீர்சிங் (ஹாக்கி)
3)சுரேஷ் (கபடி)
4)நீர் பகதூர் குராங்க்(பாரா தடகளம்)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement