ஜெஃப் பெசோஸ் தொண்டு நிறுவனங்களுக்கு எவ்வளவு நன்கொடை அளிக்கிறார்? $124 பில்லியன்?

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், தனது சொத்துக்களில் பெரும்பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் 124 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களில் இருந்து எவ்வளவு தொகையை நன்கொடையாக கொடுக்கப் போகிறார் என்பதையோ அல்லது எந்த தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப் போகிறார் என்பதையோ அவர் சரியாகக் குறிப்பிடவில்லை. “மனிதநேயத்தை ஒருங்கிணைத்து ஆழமான சமூக மற்றும் அரசியல் பிளவுகளை குணப்படுத்தக்கூடிய” மக்களுக்கு ஆதரவளிக்க விரும்புவதாக அவர் கூறினார்.

அமேசான் நிறுவனரும், உலகத்தில் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான ஜெஃப் பெசோஸ் தனது $124 பில்லியன் செல்வத்தின் பெரும்பகுதியை பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்தார்.  

மேலும் படிக்க | திகில் அனுபவத்தை கொடுக்கும் இங்கிலாந்து சிறை! கேள்விபட்டிருக்கிறீர்களா?

CNN உடனான ஒரு நேர்காணலில் பங்கேற்ற பெசோஸ் மற்றும் தனது கூட்டாளியான லாரன் சான்செஸ் இருவரும் இந்த பணத்தை கொடுக்கக்கூடிய திறனை வளர்த்துக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.  

எவ்வளவு பணத்தை எந்த தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க உள்ளார்கள் என்பதைப் பற்றி அவர் சரியாகக் குறிப்பிடவில்லை என்று டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

ஆனால், “மனிதநேயத்தை ஒருங்கிணைத்து ஆழமான சமூக மற்றும் அரசியல் பிளவுகளைக் சீர்படுத்தக்கூடிய” மக்களை ஆதரிக்க விரும்புவதாக பெசோஸ் கூறினார்.

“கடினமான பகுதி என்னவென்றால், அதை எவ்வாறு எந்த வழியில் செய்வது என்று கண்டுபிடிப்பது எளிதானது அல்ல, அதேபோல அமேசானை உருவாக்குவது எளிதானது அல்ல,” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க | 9ஆவது குழந்தை வரப்போகுது… அதனால் இன்னொரு பொண்ணு வேணும் – அடம்பிடிக்கும் பிரபலம்

“ஒரு நிறுவனத்தை உருவாக்க கடின உழைப்பு தேவை, மிகவும் புத்திசாலித்தனமான அணியினர் தேவை. பிறருக்கு உதவி செய்வதும் இதை ஒத்ததாக இருக்கிறது – இது எளிதானது அல்ல, மிகவும் கடினமானது” என்று அவர் தெரிவித்தார்.

‘பெசோஸ் எர்த் ஃபண்ட்’ மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் இயற்கையைப் பாதுகாப்பதற்கும் $10 பில்லியனை வழங்குவதாக பெசோஸ் ஏற்கனவே உறுதியளித்துள்ள நிலையில், அவர் உறுதிமொழி வழங்குவது தொடர்பாக விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்த உறுதிமொழியில் உலகின் நூற்றுக்கணக்கான செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தின் பெரும்பகுதியை வழங்க உறுதிபூண்டுள்ளனர்.

சமீபத்தில் பெசோஸ், நாட்டுப்புற இசை நட்சத்திரமும், பரோபகாரருமான டோலி பார்டனுக்கு “பெசோஸ் கரேஜ் & சிவிலிட்டி விருதில்” இருந்து $100 மில்லியன் பரிசை வழங்கினார். பெசோஸின் கூற்றுப்படி, இந்த விருது “தைரியம் மற்றும் நாகரீகத்துடன் தீர்வுகளைத் தொடரும்” தலைவர்களை கௌரவிக்கிறது மற்றும் அங்கீகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 2022 உலகக் கோப்பை டி-20 போட்டியின் சிறப்பு தருணங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.