தி இமேஜினேரியம் ஆஃப் டாக்டர் பர்னாசஸ் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரியான் கிரந்தம், தனது அம்மா பார்பரா வெயிட்டை பியானோ வாசித்து கொண்டு இருக்கும் போது தலையில் சுட்டுக் கொன்றுள்ளார்.
பிரபலமான குழந்தை நட்சத்திரம்
கனடாவின் வான்கூவரில் உள்ள பள்ளியில் மாணவராக இருந்த போது ரியான் கிரந்தமிற்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இளம் நடிகர்களை போலவே அவரும் பெரிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு முன் விளம்பரத்தில் தோன்றினார்.
GETTY
அதன்பின், சூப்பர் நேச்சுரல் மற்றும் ரிவர்டேல் உள்ளிட்ட ஹிட் டிவி நிகழ்ச்சிகளிலும் தி இமேஜினேரியம் ஆஃப் டாக்டர் பர்னாசஸ் போன்ற திரைப்படங்களிலும் ரியான் கிரந்தம் ஒரு முன்னாள் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
பியானோ வாசித்த தாயை தலையில் சுட்டுக் கொலை
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தாலும், அவர் மன சோர்வு அடைந்து போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.
இந்த நிலையில் தாய் பார்பரா பியானோ வாசித்து கொண்டு இருந்த போது, அவள் பின்னால் நடந்து வந்து ரியான் கிரந்தம் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
இதை தொடர்ந்து தனது GoPro கேமராவை பயன்படுத்தி சூழலை படம் பிடித்துள்ளார், அதில் “நான் அவளை தலையின் பின்புறத்தில் சுட்டேன். அடுத்த சில நிமிடங்களில், அது நான் என்பதை அவள் அறிந்திருப்பாள்”. என்று ரியான் கிரந்தம் குறிப்பிட்டுள்ளார்.
YOUTUBE
அத்துடன் பார்பராவின் உடலை ஒரு தாளால் மூடி பின்பு, மீண்டும் பீர் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தி விட்டு நெட்ஃபிக்ஸ் பார்த்துள்ளார்.
நீதிமன்றத்தில் விசாரணை
சம்பவத்திற்கு அடுத்த நாள் கிரந்தம் வான்கூவர் காவல் நிலையத்திற்குள் சென்று “நான் என் தாயைக் கொன்றேன்” என்று தவறை ஒப்புக் கொண்டார்.
இதை தொடர்ந்து நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் ரியான் கிரந்தமிற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
YOUTUBE
இருப்பினும் அவர் செப்டம்பர் மாதத்தில் பரோலில் சிறையை விட்டு வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.