பொதுவாக நம்மில் பலருக்கு பெரும் தொல்லையாக இருப்பது பருக்கள் பிரச்சினையே.
பருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதனை சரியான முறையில் பராமரிக்கமால் விட்டால் பல ஆண்டுகள் கழித்தும் பருக்களால் ஏற்பட்ட கருமையான தழும்புகள் முகத்தை ஆக்ரமித்துவிடும். இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது.
அந்தவகையில் பருக்கள் வந்ததால் முகத்தில் இருக்கும் தழும்புகளை நிச்சயமாக எளிய பொருட்கள் மூலம் போக்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.
imgae – medlineplus
- எண்ணெயை சிறிது சூடாக்கி உள்ளங்கையில் வைத்து முகத்தில் வட்டவடிமாக தேய்த்து மசாஜ் செய்யலாம். இது முகப்பருவை உண்டாக்கும் முக்கிய பாக்டீரியாக்களை அழிக்கிறது
- சிறிது மஞ்சளை அரை டீஸ்பூன் பன்னீருடன் சேர்த்து முகப்பரு தழும்புகள் மீது தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம்.
- ஒரு காட்டன் துணியில் 2-3 சொட்டுகள் முகப்பரு பகுதிகளில் தடவவும். இதனால் 2-3 நாட்களுக்கு தொடர்ந்து செய்து தழும்புகள் மறையும்.
- ஒரு கிண்ணத்தில் இரண்டு டீஸ்பூன் முல்தான் மிட்டி, ஒரு டீஸ்பூன் சந்தனப்பொடி, மஞ்சள் பொடி சேர்க்கவும். இதனுடன் தேவைக்கேற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக மாற்றி கொள்ளவும்.
உங்கள் முகத்தை கழுவிய பின் இந்த பேஸ்டை முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் உலர விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகப்பரு ஏற்படுவது குறையும்.
- சிறிதளவு பச்சை திராட்சையை எடுத்துக் கொண்டு அதனை தண்ணீரில் ஈரப்படுத்தி கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் படிகாரம் மற்றும் உப்பு கலவையைத் தெளித்து 15 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் கொதிக்க விடவும்.