இரண்டு குழந்தைகளுக்கு பின், இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று இளவரசி கேட் மிடில்டனுக்கு எச்சரிகை விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ் ஆகிய மூன்று குழந்தைகளுக்கு பெற்றோரான வெல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் தம்பதி, லூயிஸ் பிறப்பதற்கு முன் இப்படியொரு எச்சரிக்கையை பெற்றுள்ளனர்.
பொம்மை பரிசு
இளவரசி சார்லோட் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 2017-ல் வில்லியம் மற்றும் கேட் தம்பதி போலந்து மற்றும் ஜேர்மனிக்கான சுற்றுப்பயணத்தின்போது, போலந்தின் தலைநகர் வார்சாவில் அவர்களுக்கு ஒரு அழகான பொம்மை பரிசாக கொடுக்கப்பட்டது.
Alamy
இளவரசி கேட் கர்ப்பம்
அந்த பொம்மையை பார்த்துவிட்டு, இளவரசி கேட் தனது கணவரிடம் “நாம் இன்னும் குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்” என்று கூறினார். அப்போது, இளவரசி கேட் தனது மூன்றாவது கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்தார்.
அதையடுத்து ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர்கள் மூன்றாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருந்த நிலையில், வில்லியம் மற்றும் கேட் இனி குழந்தைகளைப் பெறக்கூடாது என்று ஒரு குழந்தைகள் அமைப்பால் எச்சரிக்கப்பட்டனர்.
Getty Images
எச்சரிக்கை கடிதம்
Having Kids எனும் குழந்தைகள் நல அமைப்பின் நிர்வாக இயக்குநர் தலைவர் Anne Green Carter Dillard, அவர்கள் கர்ப்பமாக இருப்பதை நிறுத்த வேண்டும் என்று ஒரு புண்படுத்தும் கடிதத்தை எழுதினார்.
அதில், “ஒரு பெரிய குடும்பம் நிலைத்தன்மை மற்றும் சமத்துவத்தின் கட்டாய சிக்கல்களை எழுப்புகிறது”, எனவே, வில்லியம்-கேட் தம்பதி தங்கள் குடும்பத்தை விரிவுபடுத்துவதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினார்.
மேலும் அந்த கடிதத்தில், “நிச்சயமாக, இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லோட் அற்புதமான வாழ்க்கையை வாழ்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், வறுமை மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு அச்சுறுத்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். அவர்கள் உகந்த அளவிலான கவனிப்பையும் கவனத்தையும் பெறுவார்கள், அத்துடன் சிறந்த கல்வியையும் பெறுவார்கள். ஆனால் எதிர்காலத்தில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இதையே சொல்ல முடியாது” என்று எழுதினார்.
Getty Images
இருப்பினும், சில வாரங்களுக்குப் பிறகு, கேட் மற்றும் வில்லியம் அவர்கள் மூன்றாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்ற செய்தியைப் பகிர்ந்து கொண்டனர் மற்றும் இளவரசர் லூயிஸ் ஏப்ரல் 2018-ல் பிறந்தார்.