பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச மடிக்கணினி..!!

புதுவை பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் குழந்தைகள் தினவிழா காமராஜர் மணிமண்டபத்தில் நேரு நடைபெற்றது . விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார்.

விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

எதிர்காலத்தில் இந்தியாவை சிறந்த நாடாக்குவது மாணவர்களாகிய உங்கள் கைகளில் உள்ளது. மத்திய அரசு இப்போது புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளது. சிறந்த கல்வியை பெற்று மாணவர்கள் சிறந்து விளங்குவதுதான் அரசின் எண்ணம். மாணவ பருவத்தில் நீங்கள் நன்றாக படிக்கவேண்டும். வாழ்க்கையில் முன்னேற கல்வி அவசியம். சிறந்த கல்வியை தருவது அரசின் கடமை.அதை சரியாக செய்கிறோம்.

கல்வி என்பது அரசு வேலைக்காக செல்வதற்கு மட்டுமல்ல. சிந்தித்து செயல்படவும்தான். நல்ல சிந்தனையை தருவது கல்வி. நாம் அனைவரும் ஒரு குறிக்கோளுடன் படிக்கவேண்டும். கடின உழைப்பு இருந்தால் எதிலும் வெற்றிபெறலாம். எந்த படிப்பு படித்தாலும் வெற்றிபெறலாம். வேளாண்மை படித்தவர்கள்கூட ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி உள்ளனர். எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த வயதில் எளிதில் மனதை மாற்றும் விஷயங்கள் நடக்கும். அதை தவிர்த்து படிக்கவேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு படியுங்கள். செல்போனில் அனைத்து விஷயங்களும் கிடைத்தாலும் நல்ல புத்தகங்களை படியுங்கள். அந்த பழக்கத்தை உருவாக்கி கொள்ளுங்கள். பெற்றோர், ஆசிரியர்கள், பெரியவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். நாங்கள் பொறுப்பேற்ற பின் மாணவர்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். விடுபட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். விரைவில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் இலவச லேப்டாப் (மடிக்கணினி) வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.