வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘வாரிசு’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்து வருகிறதோ அந்த அளவிற்கு படத்திற்கு சிக்கலும் இருந்து வருகிறது என்பது மறுக்க இயலாத உண்மை. பொதுவாக படத்திற்கு பல தரப்பினராலும் பிரச்சனை வரும், ஆனால் வாரிசு படத்திற்கு அப்படத்தின் தயாரிப்பாளராலேயே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. தெலுங்கு திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தான் வாரிசு படத்தின் தயாரிப்பாளர், இவர் முன்னர் பேசியது தற்போது இவரது படத்திற்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ல் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் குழு கூட்டத்தில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு, நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டுமென்றும், டப்பிங் படங்களுக்கு குறைவான திரையரங்குகளையே ஒதுக்க வேண்டுமென்றும் கூறியிருந்தார்.
தற்போது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் முன்னர் தில் ராஜு பேசியதை சுட்டிக்காட்டி இனிமேல் பண்டிகை காலத்தில் வெளியாகும் டப்பிங் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும் நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது. வாரிசு படத்தை 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியிட படக்குழு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது, அதே தினத்தில் தெலுங்கு திரையுலகின் சில முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியிட திட்டமிட்டிருந்ததை நினைத்து ஏற்கனவே தயாரிப்பாளர் கவலையில் இருந்துவந்த நிலையில் தற்போது லுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் வெளியிட்ட அறிக்கை அவரை மேலும் கவலையடைய செய்திருக்கிறது.
#Varisu Postponed to Jan -26 Sources from Telugu Medias . ???? We need #VarisuPongal2023 for pongal release @RedGiantMovies_ pic.twitter.com/OSXQpVIqa0
— RK SURESH (@studio9_suresh) November 13, 2022
தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின்படி வாரிசு படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிபோடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார், இதுகுறித்த அவரது ட்வீட்டில் ‘வாரிசு திரைப்படத்தின் வெளியீடு 2023ம் ஆண்டு ஜனவரி-26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் வாயிலாக கூறப்படுகிறது, எங்களுக்கு 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வாரிசு படம் வெளியாகவேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். அஜித்தின் துணிவு படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.