டெல்லியில் 26 வயது ஷ்ரத்தா என்ற பெண்ணை, அவரின் காதலன் அப்தாப் அமீன் என்பவர் கொடூரமாக கொன்ற சம்பவம் நேற்று நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த பெண்ணை கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி, அதை 18 நாள்கள் தினமும் ஒவ்வொரு துண்டையும் கொண்டு நகரின் வெவ்வேறு பகுதிகளில் புதைத்துவைத்துள்ளார். வீசி வந்துள்ளார், அமீன். இதை வெளிநாட்டு தொடர்களை பார்த்து, தெரிந்துகொண்டு அதேபோன்று செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் ஓய்வதற்குள், அடுத்து உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் மற்றொரு கொடூர கொலை ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், காசியாபாத்தை சேர்ந்த சவிதா என்ற பெண், தனது கணவர் சந்திரவீர் என்பவரை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், தனது கணவரின் இளைய சகோதரனின் மீது சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த வகையில், நான்கு வருடங்களுக்கு பின் அந்த கொலை குறித்த துப்பு போலீசாருக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து, குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் தகவலுக்காக சவிதா – சந்திரவீரின் சிறு வயது மகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவரின் மகள்,’எங்கள் வீட்டிற்கு பக்கத்துவீட்டு மாமாதான் அடிக்கடி வருவார்’ என கூறியுள்ளது. அப்போதுதான், போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சவிதாவின் பக்கத்துவீட்டுக்காரர் அருண் என்பவரும் வந்துள்ளார்.
அவரிடம் விசாரணை செய்ததில், சவிதாவும் அருணும் 2017ஆம் ஆண்டில் இருந்து திருமணத்தை தாண்டிய உறவில் இருந்து வருவது தெரியவந்தது. அருண் – சவிதா விவகாரம் அவருடைய கணவருக்கு தெரிந்துள்ளது. இதனால், சவிதாவின் கணவர், சவிதாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்த சூழலில், சவீதாவின் காதலர் அருண், சந்திரவீர் தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து, கோடாறியால் அவரின் கையை வெட்டி, காட்டுப்பகுதியில் புதைத்துள்ளார். மேலும், சந்திரவீரை கொலைச்செய்வதற்கு முன்னரே, சவிதா – அருண் ஆகியோர் 7 அடிக்கு குழியை தோண்டி வைத்துள்ளனர்.
அந்த குழியில், சந்திரவீரின் உடலை புதைத்து, அதனை சிமெண்டை நிரப்பி பூசியுள்ளனர். இதனை, சுமார் 4 ஆண்டுகளுக்கு பின் போலீசார் நேற்று கண்டறிந்தனர். மேலும், தோண்டி எடுக்கப்பட்ட உடலை உடற்கூராய்வு மேற்கொள்வதற்கும், டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து, அருண், சவிதா ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்கள் சந்திரவீரை கொலை செய்ய பயன்படுத்திய கோடாறி, கைத்துப்பாக்கி ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.