மில்லியன் கணக்கான மக்களை பட்டினிக்கு தள்ளும் விளாடிமிர் புடினின் செயல் மன்னிக்க முடியாத குற்றம் என ஐரோப்பிய ஒன்றியம் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளது.
போர் குற்றங்கள்
உக்ரைனின் கெர்சன் பகுதியில் இருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறியிருந்தாலும், 400க்கும் மேற்பட்ட போர் குற்றங்களை விளாடிமிர் புடினின் படைகள் நிகழ்த்தியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட்டுள்ளது.
@reuters
ஐரோப்பிய ஆணையம் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவிக்கையில்,
உக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூர போர் 9 மாதங்களாக நீடிக்கும் நிலையில், உலகளாவிய உணவு விநியோகமானது ஸ்தம்பிக்கும் நிலையில் உள்ளது.
காட்டுமிராண்டித்தனம்
இதனால், உலக நாடுகளுக்கு போதுமான உதவிகளை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது என்றார்.
புடினின் இந்த காட்டுமிராண்டித்தனம் மில்லியன் கணக்கான மக்களை பட்டினிக்கு தள்ளியுள்ளது.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் உணவு பற்றாக்குறை ஏற்படாதவாறு தொடர்ந்து ஆக்கபூர்வ நடவடிக்கையில் ஏற்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக 210 மில்லியன் யூரோ தொகையை உணவுக்காக ஒதுக்கியுள்ளதாகவும், தாங்கள் திட்டமிட்டுள்ளதுபடி 2024 வரையில் உணவுக்காக மட்டும் 8 பில்லியன் யூரோ தொகையை முதலீடு செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
@reuters
இதனிடையே, கெர்சனில் ரஷ்ய துருப்புகள் வெளியேறிய பின்னர் விசாரணையை முன்னெடுத்த உக்ரைன் அதிகாரிகள், 400க்கும் மேற்பட்ட போர் குற்றங்கள் கெர்சனில் அரங்கேறியுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளனர்.
தெருக்களில் சடலங்கள்
ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், போர் குற்றங்கள் அரங்கேறியுள்ளதுது அம்பலமாகியுள்ளது.
பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களின் சடலங்கள் கெர்சன் தெருக்களில் இருந்து மீட்கப்பட்டு வருகிறது என்றார்.
கெர்சனுக்கு விஜயம் மேற்கொண்ட ஜெலென்ஸ்கி, மக்களின் மன நிலையை கேட்டு தெரிந்து கொண்டார். உண்மையில் இது நடிப்பல்ல, அவர்களின் மன நிலை இது என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.