வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகும்.
எதிர்வரும் 22ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெற்று அன்றையதினம் மாலை ஐந்து மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறும். வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம திகதி முதல் டிசம்பர் எட்டாம் திகதி வரை இடம்பெறும். இதன் வாக்கெடுப்பு டிசம்பர் எட்டாம் திகதி மாலை இடம்பெறும்.
இன்று முதல் டிசம்பர் எட்டாம் திகதி வரை ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர்ந்த வாரத்தின் அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம் கூடும். வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெறும் காலப்பகுதியில் வாய்மொழிமூல பதில்களை எதிர்பார்க்கும் கேள்விகளை கேட்க முடியாது என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
டிசம்பர் ஒன்பதாம் திகதி பாராளுமன்றம் கூடும். அன்றையதினம் வாய்மொழிமூல பதில்களை எதிர்பார்க்கும் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.