அதிமுக ஆட்சியில் ரூ.1000 கோடி செலவிட்டது எங்கே? அமைச்சர் சேகர்பாபு

சென்னை தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மையால் பாதிக்கப்பட்ட நீர்நிலைப் பகுதிகளை சேர்ந்த பத்தாயிரம் குடும்பங்களுக்கு கொசு வலை வழங்கும் நிகழ்ச்சி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை மாநகர மேயர் பிரியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் கோடி செலவு செய்து மழைநீர் வடிகால் பணிகள் முடித்து விடப்பட்டது எனவும், இனி சென்னையில் மழை நீர் தேங்காது எனவும் பரப்புரை மேற்கொண்டார். அவர் தற்போது மழை நீர் தேங்கியுள்ளதை விமர்சனம் செய்வது நியாயமா? என கேள்வி எழுப்பினார். மேலும் 2016ல் 33 சதவீதம் மழை பெய்ததற்கே சென்னை மழை வெள்ளத்தில் தவித்தது. 

தற்போது திமுக ஆட்சியில் 46 சதவீதம் மழை பெய்து மழைவிட்ட 24 மணி நேரத்தில் அனைத்து மழைநீர் தேங்கும் இடத்திலும் சீரமைக்கப்பட்டது என தெரிவித்தார். மேலும் சென்னையில் என்பது சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டது வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் முழு பணிகளும் முடிவடைந்து வரும் வருடம் மழை காலங்களில் சென்னையில் தண்ணீர் முழுவதுமாக தேங்காது என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.