ரயில் நிலையத்தில் கிடந்த சிவப்பு சூட்கேசில் சடலம்!!

பஞ்சாம் மாநிலம் ஜலந்தர் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாகக் காணப்படுவது வழக்கம். இந்நிலையில் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று பெரிய சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்தது.

இது குறித்து ரயில்வே ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார்அங்கு வந்து சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதில் சடலம் ஒன்று இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அது ஆண் சடலம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் ரயில் நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இளைஞர் ஒருவர் சூட்கேஸை விட்டுச் செல்லும் காட்சிப் பதிவாகி இருந்தது. அந்த இளைஞர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூட்கேஸில் எவ்விதமான ஆவணங்களும் இல்லாததால் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என்பவர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்தவர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு உடலை சூட்கேஸில் எடுத்து வந்தார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.