ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் விடா (Vida) பிரிவின் முதல் ஷோரூம் துவங்கப்பட்டுள்ளது. விடா வி1 ஸ்கூட்டர் விலை ரூ.1.45 லட்சம் முதல் ரூ.1.59 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
விடா பெங்களூரில் தனது முதல் அனுபவ மையத்துடன் இந்திய சந்தையில் செயல்பட தொடங்கியுள்ளது. விட்டல் மல்லையா சாலையில் அமைந்துள்ள இந்த புதிய அனுபவ மையம், நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர்களான வி1 பிளஸ் மற்றும் வி1 ப்ரோ ஆகியவற்றின் டெஸ்ட் டிரைவ் வழங்கும். பெங்களூருக்கு அடுத்து டெல்லி மற்றும் ஜெய்ப்பூரில் நிறுவனம் செயல்பட துவங்கும். விடா பிராண்ட் ஏற்கனவே மேற்கூறிய மூன்று நகரங்களில் முன்பதிவுகளை தொடங்கியுள்ளது. டெலிவரிகள் டிசம்பர் 2022 இரண்டாவது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விடா V1 பிளஸ் 3.44kWh பேட்டரியைப் பெற்று 143km ரேஞ்ச் கொடுக்கவல்லது. அதே நேரத்தில் V1 Pro ஒரு பெரிய 3.94kWh பேட்டரியைப் பெற்றுள்ளது. இரண்டு வகைகளும் ஒரே மின்சார மோட்டாரைப் பெறுகின்றன, இது 6kW பவரை உருவாக்குகிறது மற்றும் V1 மின் ஸ்கூட்டர் 80kph அதிகபட்ச வேகத்தில் பயணிக்கலாம். வி1 ப்ரோ 3.2 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 40 கிமீ வேகத்தில் செல்கிறது, இது 3.4 வினாடிகளில் நிர்வகிக்கும் வி1 பிளஸை விட சற்று கூடுதல் வேகமாகச் செல்கிறது.
பேட்டரி 60 சதவீதம் சார்ஜில் இருந்தாலும், பில்லியன் ரைடரை கொண்டு செங்குத்தான சாய்வுகளில் (20 டிகிரி வரை) ஏற முடியும் என்று ஹீரோ குறிப்பிட்டுள்ளது. வேகமான சார்ஜருடன் இணைக்கப்படும் போது, இரண்டு வகைகளையும் 1.2 கிமீ பயணிக்க ஒரு நிமிடத்திற்கு வேகமாக சார்ஜ் செய்ய முடியும். வீட்டு சார்ஜரில், வி1 பிளஸ் 0-80 சதவீதத்திலிருந்து சார்ஜ் செய்ய 5 மணிநேரம் 15 நிமிடம் எடுக்கும், அதே சமயம் வி1 ப்ரோ 5 மணிநேரம் 55 நிமிடம் ஆகும்.