மதுபான கடை திறப்புக்கு எதிர்ப்பு.. திமுக கவுன்சிலரை விரட்டி அனுப்பிய மேலூர் மக்கள்!

தமிழகத்தில் மதுவிலக்கு கேட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல தரப்பிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மேலூர் அருகே அரசு சார்பில் புதிதாக திறக்க இருந்த மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராடிய சம்பவம் நடந்திருக்கிறது.
அதன்படி, மதுரை மேலூரில் உள்ள சுக்காம்பட்டி கிராமத்தில், நத்தம் செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் தமிழக அரசின் புதிய மதுபான கடை இன்று திறக்க இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான பெண்கள் உட்பட பொதுமக்கள் போராட்டத்தில் இறங்க முடிவு செய்து திடீரென சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர்.
image
அப்போது திமுகவுன் கவுன்சிலரான பாண்டி என்பவர் சாலை மறியலில் ஈடுபட்ட சுக்காம்பட்டி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்திருக்கிறார். ஆனால் மக்கள் நலத்துக்கு எதிராக அமைய இருக்கும் மதுபான கடைக்கு ஆதரவாக கவுன்சிலரே பேச்சுவார்த்த நடத்த வந்ததை கண்டித்ததோடு, “தேர்தல் சமயத்தில் ஓட்டு கேட்டு வந்ததோடு சரி, அதன் பிறகு ஆளையே காணவில்லை” என குற்றஞ்சாட்டி கவுன்சிலர் பாண்டியை விரட்டி அனுப்பியிருக்கிறார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதோடு, திமுக கவுன்சிலரை விரட்டி அனுப்பிய பொதுமக்களின் செயல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.