மும்பையை தலைமையிடமாக கொண்ட மின்சார வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனம் PMV எலக்ட்ரிக் நிறுவனம் Eas-E என்ற பெயரில் மினி கார் அல்லது குவாட்ரிசைக்கிள் மாடலை ரூ.4.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய EV மைக்ரோகாரை இந்தியாவில் தனிநபர் வாகனப் பிரிவில் மிக மலிவான மின்சார காராக விளங்குகின்றது. இரு வயது வந்தோர் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் குவாட்ரிசைக்கிள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
PMV Eas-E குவாட்ரிசைக்கிள்
Eas-E மாடலுக்கு முன்பதிவு கட்டணமாக ரூ.2,000 வசூலிக்கப்பட்டு வருகின்றது. சுமார் 2000 ஆர்டர்களை இந்தியாவிலும் மற்றும் சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே 6,000 க்கும் மேற்பட்ட முன்கூட்டிய ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக பிஎம்வி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. புனே அருகே உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை 2023 ஆம் ஆண்டின் மத்தியில் டெலிவரியைத் தொடங்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. இந்த குவாட்ரிசைக்கிளுக்கு 3 வருடம் அல்லது 50,000 கிமீ வாரண்டியுடன் வழங்கப்படுகிறது.
குவாட்ரிசைக்கிள் என்றால் என்ன ?
IP67 வகையாக தரப்படுத்தப்பட்ட நிரந்தர காந்த ஒத்திசைவான மோட்டார் 13hp மற்றும் 50Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இது முன்புற சக்கரங்களுக்கு சக்தியை அனுப்புகிறது. Eas-E மாடல் 0-40 கிமீ வேகத்தை எட்ட 5 வினாடிகள் எடுத்துக் கொள்ளும் மற்றும் மணிக்கு 70 கிமீ என்ற அதிகபட்ச வேகத்தை எட்ட முடியும்.
1,157 மிமீ அகலம், 2,915mm நீளமும் மற்றும் 1,600mm உயரமும் PMV Eas-E குவாட்ரிசைக்கிள் 2,080mm வீல்பேஸ் மற்றும் 170mm கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.
48V லித்தியம் ஐயன் பாஸ்பேட் பேட்டரி கொண்டுள்ள Eas-E ஆனது 15A சாக்கெட்டைப் பயன்படுத்தி நான்கு மணி நேரத்திற்குள் சார்ஜ் செய்ய முடியும். மைக்ரோகார் மூன்று விதமான ரேஞ்சு விருப்பங்களில் – 120 கிமீ, 160 கிமீ மற்றும் 200 கிமீ ஆக கிடைக்க உள்ளது. PMV Eas-E இயக்குவதற்கான செலவு ஒரு கிமீக்கு 75 பைசாவிற்கும் குறைவாக இருக்கும் என்று கூறுகிறது.
எல்இடி ரன்னிங் பகல்நேர விளக்குகள் உடன் வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள் மற்றும் ஒற்றை விண்ட்ஸ்கிரீன் வைப்பர் உள்ளது. மைக்ரோகார் குட்டியாகவும், நேர்த்தியாகவும் C-தூணில் மேல்நோக்கிச் செல்கிறது. பின்புற பம்பரில் இரண்டு வட்ட வடிவ விளக்குகளுடன் அதன் டெயில்-லைட்களுக்கு மெல்லிய LED லைட்பாரையும் பெறுகிறது. மைக்ரோகார் ஒற்றை மற்றும் இரட்டை டோன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
PMV Eas-E மின்சார குவாட்ரிசைக்கிள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு தற்போது நேரடி போட்டியாளர்கள் இல்லை. ஆனால் போட்டியாளர் பஜாஜ் க்யூட் ஐசி என்ஜின் பெற்றதாகும்.