ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடக்கப்பட்டு உள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியம் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும், அவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், பின்னர், முதல்வர் கடிதம் எழுதுவதும், மத்தியஅரசு இலங்கையை வலியுறுத்துவதும், பின்னர் இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவம் தொடர் கதையாக உள்ளது. இதை முறைப்படுத்த இந்திய இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என மீனவர்களும், தமிழகஅரசும், தமிழக அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், நேற்று ராமேஸ்வரம் பகுதியில் இருந்து சுமார்  400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். அவர்களில் ஒரு படகில் சென்ற 14 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களின் படகையும் இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள், இலங்கை பருத்தித்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடரும் அத்துமீறல் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.