இளவரசர் வில்லியம் மூர்க்க குணம் கொண்டவர்: மொத்தமாக அம்பலப்படுத்தும் பிரித்தானிய ராஜகுடும்பத்து விசுவாசி


இளவரசர் வில்லியம் மூர்க்க குணம் கொண்டவர் எனவும், தாம் செய்வது எல்லாம் சரியே என்ற மன நிலையில் வாழ்பவர் எனவும் பிரித்தானிய ராஜகுடும்பத்து விசுவாசி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இளவரசர் வில்லியம்

இதுவரை இளவரசர் ஹரி- மேகன் தம்பதி தொடர்பிலேயே பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.
ஹரியின் வாழ்க்கை இனி அமெரிக்காவில் தான், அவர் பிரித்தானிய ராஜகுடும்பத்திற்கு திரும்ப வாய்ப்பில்லை எனவும்,

இளவரசர் வில்லியம் மூர்க்க குணம் கொண்டவர்: மொத்தமாக அம்பலப்படுத்தும் பிரித்தானிய ராஜகுடும்பத்து விசுவாசி | Prince William Self Righteous Royal Expert

@getty

முன்னாள் நடிகை மேகன் மெர்க்கலை திருமணம் செய்துகொண்ட பின்னர் அவர் மொத்தமாக மாறிவிட்டார், அல்லது மேகன் மெர்க்கல் இளவரசர் ஹரியை தமக்கு ஒரு கைப்பாவையாக மாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனால் தற்போது முதன்முறையாக இளவரசர் வில்லியம் தொடர்பில் பிரித்தானிய ராஜகுடும்பத்து விசுவாசி ஒருவர் மொத்தமாக அம்பலப்படுத்தியுள்ளார்.
வில்லியம் எப்போதும் தாம் செய்வதே சரி என்ற சுயநீதியுள்ள நபர் எனவும் மூர்க்க குணம் கொண்டவர் எனவும் பிரித்தானிய ராஜகுடும்பத்து விசுவாசியான Simon Heffer தெரிவித்துள்ளார்.

ஹரி புறக்கணிப்பு

ஆனால், தமது குடும்பம் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் எனவும், அதனாலையே ராஜகுடும்பத்தை அம்பலப்படுத்தும் சகோதரர் ஹரியை அவர் புறக்கணிப்பதாகவும் Simon Heffer சுட்டிக்காட்டியுள்ளார்.

இளவரசர் வில்லியம் மூர்க்க குணம் கொண்டவர்: மொத்தமாக அம்பலப்படுத்தும் பிரித்தானிய ராஜகுடும்பத்து விசுவாசி | Prince William Self Righteous Royal Expert

@getty

மட்டுமின்றி, இளவரசர் ஹரி, வாழ்க்கை முழுவதும் அமெரிக்காவிலேயே தங்கிவிட மாட்டார் எனவும், அவருக்கு நெருக்கமான சில நண்பர்கள் அதை வெளிப்படுத்தியுள்ளதாகவும் Simon Heffer தெரிவித்துள்ளார்.

மேலும், ஹரி பிரித்தானியா திரும்ப முடிவு செய்தால், மன்னர் சார்லஸ் ஏற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளார் எனவும், வில்லியம் மட்டும் கண்டிப்பாக இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.

ராஜகுடும்பத்தை சேதப்படுத்தும்

அத்துடன், ஹரியின் வெளிவரவிருக்கும் புத்தகம் ராஜகுடும்பத்தை அதிகமாக சேதப்படுத்தாமல் இருந்தால், மன்னரால் ஹரியை மன்னிக்க முடியும் எனவும் Simon Heffer சுட்டிக்காட்டியுள்ளார்.

இளவரசர் வில்லியம் மூர்க்க குணம் கொண்டவர்: மொத்தமாக அம்பலப்படுத்தும் பிரித்தானிய ராஜகுடும்பத்து விசுவாசி | Prince William Self Righteous Royal Expert

@AP

சமீப காலத்தில் ஹரியின் நடத்தை வில்லியமுக்கு பிடிக்கவில்லை எனவும், அந்த புத்தகம் வெளிவருவது வில்லியமால் நம்ப முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஆனால், தமது வாழ்க்கையை வெளிப்படையாக பிரதிபலிக்கும் புத்தகம் அது என இளவரசர் ஹரி உறுதி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.