வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் லிப்லாக் புகைப்படம்! அதுவும் யார்கூட தெரியுமா?

பாலிவுட் திரைப்பட உலகில் கோலோச்சிய ஐஸ்வர்யா ராய், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிஸியாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், மகள் பிறந்ததற்கு பிறகு நடிப்பை நிறுத்திக் கொண்டார். சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கிய ஐஸ்வர்யா ராய், லேட்டஸ்டாக தமிழில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்து அசத்தியிருந்தார்.

இந்தப் படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் அவர், தன்னுடைய மகள் ஆராத்யாவின் 11வது பிறந்தநாளை சில நாட்களுக்கு முன்பு கொண்டாடினார். அப்போது, மகளுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போல் புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டார். இந்தப் புகைப்படம் தான் இப்போது சோஷியல் மீடியா சென்ஷேஷனாக மாறியிருக்கிறது. அதாவது, மகளுக்கு யாராவது உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பார்களா? எனவும், ஆபாச வார்த்தைகளும் சிலர் கடுமையாக விமர்சனம் செய்ய, பதிலுக்கு ஐஸ்வர்யா ராயின் அன்பை கொச்சைபடுத்துபவர்கள் நாகரீகமற்றவர்கள் என பதிலடி கொடுத்துவருகின்றனர் அவரது ரசிகர்கள். 

ஐஸ்வர்யா ராய் பதிவிட்டிருக்கும் அந்த புகைப்பட்டத்திற்கு கேப்சனாக ‘எனது அன்பு… எனது வாழ்க்கை’ என உணர்ச்சிப்பூர்மாக கூறியுள்ளார். இதற்கு உங்கள் மகள் மீது நீங்கள் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனை உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து பொதுவெளியில் வெளியிட தேவையில்லை என விமர்சித்துள்ளனர். இன்னும் சிலர், ஐஸ்வர்யா ராய்க்கு இங்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம், அவரவர்கள் அவர்கள் வீட்டை நன்றாக பார்த்துக் கொண்டாலே போதும் என ஐஸ்வர்யா ராயுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | துணிவு டீம் போட்ட ஸ்கெட்சில் வசமாக சிக்கிக் கொண்ட வாரிசு! இப்போதைக்கு இதுதான் நிலைமை 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.