LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியைக் கொடுக்கும். QR குறியீடு கொண்ட சிலிண்டரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நீங்கள் சிலிண்டரைக் கண்காணிக்கவும் டிரேஸ் செய்யவும் முடியும்.
எல்பிஜி சிலிண்டரைக் கண்காணிக்கலாம்
இந்தியன் ஆயில் (IOCL) தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, அடுத்த மூன்று மாதங்களில் அனைத்து வீட்டு எரிவாயு சிலிண்டர்களிலும் QR குறியீடு இருக்கும் என்று கூறினார். 2022 ஆம் ஆண்டின் உலக எல்பிஜி வாரத்தையொட்டி, வாடிக்கையாளர்கள் எல்பிஜி சிலிண்டர்களைக் கண்காணிக்க முடியும் என்ற அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது ஒரு புரட்சிகரமான மாற்றம் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார். இது குறித்த வீடியோவையும் அமைச்சர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Fueling Traceability!
A remarkable innovation – this QR Code will be pasted on existing cylinders & welded on new ones – when activated it has the potential to resolve several existing issues of pilferage, tracking & tracing & better inventory management of gas cylinders. pic.twitter.com/7y4Ymsk39K— Hardeep Singh Puri (@HardeepSPuri) November 16, 2022
வெல்டிங் மூலம் புதிய சிலிண்டரில் QR குறியீடு
க்யூஆர் குறியீடு மூலம் சிலிண்டர் குறித்த முழுமையான தகவல்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று கூறிய IOCL தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, LPG சிலிண்டர் எங்கு நிரப்பப்பட்டது மற்றும் சிலிண்டர் தொடர்பான பாதுகாப்பு சோதனைகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன ஆகிய தகவல்களை பெற முடியும் என்றார். தற்போதுள்ள சிலிண்டரில் உள்ள லேபிள் மூலம் QR குறியீடு ஒட்டப்படும், அதே நேரத்தில் புதிய சிலிண்டரில் வெல்டிங் செய்யப்படும்.
QR குறியீடு பதிக்கப்பட்ட 20 ஆயிரம் எல்பிஜி சிலிண்டர்கள் வெளியீடு
முதல் கட்டத்தில், யூனிட் குறியீடு அடிப்படையில், QR குறியீடுகள் பதிக்கப்பட்ட 20,000 எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. இது ஒரு வகை பார்கோடு என்பதை பலர் அறிந்திருக்க கூடும். இதை டிஜிட்டல் சாதனம் மூலம் ஸ்கேன் செய்து படிக்கலாம். அடுத்த மூன்று மாதங்களில், அனைத்து 14.2 கிலோ வீட்டு எல்பிஜி சிலிண்டர்களிலும் க்யூஆர் குறியீடு பொருத்தப்படும் என்று பூரி கூறினார்.
பிரதன மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY)
பிரதன மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) தொடங்கப்படுவதற்கு முன்பு, நாட்டின் கிராமப்புற குடும்பங்களுக்கு சுத்தமான சமையல் எரிபொருள் கிடைப்பது பெரிய சவாலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து, கிராம மக்கள் அனைவரும், கேஸ் இணைப்பு பெற்று, தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.