சென்னை: ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை முதல்வர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு ரூ. 6.63 கோடி மதிப்பீட்டிலான 81 பொலிரோ வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக் கான சேவையினை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு பொலிரோ வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர், ரூ.24.71 கோடியில் கட்டப்பட்ட 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை கட்டங்களை திறந்து வைக்கப்பட்டது. ஒன்றிய அலுவலக கட்டடம், சுய உதவிக் குழு கட்டிடங்களும் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
#tdi_1 .td-doubleSlider-2 .td-item1 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/11/stalin-Uratchi-report-17-11-22-02.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item2 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/11/stalin-Uratchi-report-17-11-22-03.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item3 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/11/stalin-Uratchi-report-17-11-22-04.jpg) 0 0 no-repeat;
}