சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மறைந்த பிரியா பெயரில் சென்னை மிகப்பெரிய கால்பந்தாட்ட போட்டி பாஜக சார்பில் நடத்தப்படும் என அண்ணாமலை தெரிவித்தார்.