உடல் எடை கடகடனு குறையனுமா? 7 நாட்கள் இந்த 7 பானத்தை மறக்கமால் குடிங்க போதும்


இன்றைக்கு பலரும் உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

உடலில் கொழுப்பு மற்றும் பிற கழிவுகள் தேங்கியிருப்பது கூட உடல் பருமன் பிரச்சினை அதிகரிக்கும்.

இதனை எளியமுறையில் கரைக்க முடியும்.

இதற்கு ஒரு சில இயற்கை பானங்கள் பெரிதும் உதவுகின்றது.

அதில் சிலவற்றை தொடர்ந்து 7 நாட்கள் எடுத்து கொள்வது இன்னும் நன்மையே தரும்.
இவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.  

உடல் எடை கடகடனு குறையனுமா? 7 நாட்கள் இந்த 7 பானத்தை மறக்கமால் குடிங்க போதும் | 7 Days To Quick Weight Loss Diet Tamil

  • தண்ணீரில் கொத்தமல்லி விதைகளைப் போட்டு நன்கு கொதிக்க விட்டு , நீரை வடிகட்டி வெதுவெதுப்பான நிறையில் குடித்து வரவும்.
  • தண்ணீரில் இரவு முழுவதும் வெந்தயத்தைச் சேர்த்து ஊற வைத்து குடிப்பது நல்லது. 
  • தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் இலவங்கப்பட்டையை இடித்து சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின் வடிகட்டி அதனுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். 
  • 2 கப் தண்ணீரில் சீரகத்தைச் சேர்த்து இரவு முழுக்க ஊற வைத்து அடுத்த நாள் காலையில் எழுந்ததும் 10 நிமிடங்கள் கொதித்த பிறகு அந்த நீரை வடிகட்டி ஆற வைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.
  • தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் அதில் ஓமத்தைச் சேர்த்து அடுப்பை மிதமாக தீயில் வைத்து நன்கு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்பு இந்த நீரை வடிகட்டி வெதுவெதுப்பான நிலையில் காலையில் வெறும் வயிற்றில ஒரு கப் குடிக்க வேண்டும். அதேபோல இரவு உணவுக்குப் பிறகு படுக்கப் போகும்முன் ஒரு கப் குடியுங்கள். 
  •  வெட்டி வேரை சுத்தம் செய்து ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரில் போட்டு ஊற விட்டு இதன் சாரம் நீருக்குள் இறங்கியதும் அதை வடிகட்டி இந்த நீரை அப்படியே குடிக்கலாம். காலை வெறும் வயிற்றில் மட்டுமல்லாது, நாள் முழுக்க தண்ணீருக்கு பதிலாக இந்த தண்ணீரை குடிக்கலாம். 
  • வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழத்தின் சாறினைப் பிழிந்து நன்கு கலக்கி காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். சுவைக்கு தேவைப்பட்டால் தேன் சேர்த்து குடிக்கலாம்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.