இலங்கை மின்சார சபை பல்லாயிரக்கணக்கான ரூபா நஷ்டத்தை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது.
2022ம் நிதியாண்டுக்கான மூன்றாம் தவணைக்காலமான கடந்த ஜுலை தொடக்கம் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் மட்டும் 4431 கோடி ரூபா நஷ்டத்தை மின்சார சபை எதிர்கொண்டுள்ளது.
இலங்கை மின்சர சபை
இது தொடர்பான விபரங்கள் மின்சார சபையினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள கணக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சர சபை கடந்த நிதியாண்டின் இதே காலப்பகுதியில் 2145 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.