கேரள மாநிலத்தை சேர்ந்த சோனு (20 வயது) என்ற இளம்பெண் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்துவிட்டு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டலில் கடந்த 3 மாதங்களாக பனி செய்து வந்துள்ளார்.
ஏற்கனவே இளம்பெண் சோனுவுக்கும் சென்னையை சேர்ந்த நவீன் என்பவனுக்கு இடையே பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு, இருவரும் நேரில் சந்தித்து பேசி பழகியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சோனுவிடம் நவீன் தன் காதலை தெரிவித்து, தான் கப்பல் படையில் வேலை செய்வதாக கூறி உள்ளார். நாவினி காதலை ஏற்க மறுத்து சோனு, அவரை விட்டு விலகி சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நவீன், சோனுவை கொலை செய்ய பல நாட்களாக திட்டமிட்டு, சம்பவம் நடந்த நேற்று முன்தினம் இரவு, கீழ்ப்பாக்கம் அருகே சோனுவை வழிமறித்த நவீன், தான் கையில் எடுத்துவந்த காலி மது பாட்டிலால் முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் சோனுவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சோனுவின் முகத்தில் 25 இடங்களில் ஏற்பட்ட படுகாயங்களுக்கு தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நவீனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.