புது டில்லி: பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டில்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் இருவரின் ஜாமின் கோரும் மனுக்கள் மீதான உத்தரவை, டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு இன்று(நவ.,16) தள்ளுபடி செய்தது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் சத்யேந்தர் ஜெயின் மீது, 2015ல் அமலாக்கத் துறை பணப்பரிமாற்ற மோசடி வழக்கு பதிவு செய்து, அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான, 4.81 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்திருந்தது.
இதன் அடிப்படையில் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் துவங்கியது. டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை கடந்த மே மாதம் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்தது. பணமோசடி வழக்கில் ஜாமின் வழங்கக்கோரி டில்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சிறப்பு நீதிபதி விகாஸ் துல் முன் இன்று(நவ.,17) விசாரணைக்கு வந்தது. இந்தநிலையில், பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டில்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் இருவரின் ஜாமின் கோரும் மனுக்கள் மீதான உத்தரவை, டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement