ஆவிகள் நடமாட்டத்தால் அரண்மனையில் வேலை செய்ய தயங்கிய பணியாளர்கள்: பாதிரியார் தெரிவித்த திகில் தகவல்

பிரித்தானிய ராஜ குடும்பத்துக்குச் சொந்தமாக பல மாளிகைகள் உள்ளதை பலரும் அறிந்திருக்கக்கூடும். அவற்றில் ஒன்று Sandringham இல்லம்.

மாளிகையில் ஒரு குறிப்பிட்ட அறைக்குள் நுழைய மறுத்த பணியாளர்கள்

Sandringham இல்லத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட அறைக்குள் செல்ல பணியாளர்கள் தயங்குவார்களாம். அங்கு ஆவி நடமாட்டம் இருப்பதாக அவர்கள் கருதியதால், அங்கு வேலை செய்ய அவர்கள் தயங்கியுள்ளார்கள்.

ஆவிகள் நடமாட்டத்தால் அரண்மனையில் வேலை செய்ய தயங்கிய பணியாளர்கள்: பாதிரியார் தெரிவித்த திகில் தகவல் | The Queen Sandringham House Ghost

Image: Neil Holmes/Getty Images

மகாராணியார் எடுத்த நடவடிக்கை

இந்த விடயத்தை அறிந்த மகாராணியார், பாதிரியார் ஒருவரை அழைத்து அந்த அறையில் பிரார்த்தனை செய்ய முடிவு செய்துள்ளார்.

மாளிகைக்கு வந்த பாதிரியார் ஒவ்வொரு அறையாக சென்றுள்ளார். அப்போது, ஒரு அறையில் மட்டும் பிரச்சினை இருப்பதை அவர் உணர்ந்துகொண்டாராம்.
 
ஆவிகள் நடமாட்டத்தால் அரண்மனையில் வேலை செய்ய தயங்கிய பணியாளர்கள்: பாதிரியார் தெரிவித்த திகில் தகவல் | The Queen Sandringham House Ghost

Image: Getty

அந்த அறை, மன்னர் ஆறாம் ஜார்ஜ் தனது இறுதிக்காலத்தை செலவிட்ட அறையாம். 

அந்த அறையில், மகாராணியார், அவரது தாயார் மற்றும் அவர்களுடைய உதவியாளரான Prue Penn என்னும் பெண் ஆகியோர் மட்டும் இருக்க, அந்த பாதிரியார் அங்கு பிரார்த்தனை செய்தாராம். அந்த பிரார்த்தனை அங்கிருக்கும் ஆவிகளைத் துரத்துவதற்காக அல்ல, அந்த அறையில் அமைதிய ஏற்படுத்துவதற்காக என்று பின்னர் கூறியுள்ளார் Prue Penn.

ஆவிகள் நடமாட்டத்தால் அரண்மனையில் வேலை செய்ய தயங்கிய பணியாளர்கள்: பாதிரியார் தெரிவித்த திகில் தகவல் | The Queen Sandringham House Ghost

Image: Getty Images

பாதிரியார் கூறிய திகில் தகவல்

அப்போது, பாதிரியார் வேறொரு திகிலை ஏற்படுத்தும் செய்தியையும் தெரிவித்துள்ளார். அந்த அறையில் இருந்த பிரச்சினைக்குக் காரணம், கோரமான மரணத்தைச் சந்தித்த ஒருவரின் ஆவியாகவும் இருக்கலாம் என்றாராம் அவர்.

அதாவது, அது சில ஆண்டுகளுக்கு முன் பயங்கரமான விபத்தில் உயிரிழந்த இளவரசி டயானாவின் ஆவியாகவும் இருக்கலாம் என்று கூறியுள்ளார் அந்த பாதிரியார்!
 
ஆவிகள் நடமாட்டத்தால் அரண்மனையில் வேலை செய்ய தயங்கிய பணியாளர்கள்: பாதிரியார் தெரிவித்த திகில் தகவல் | The Queen Sandringham House Ghost

Image: Getty Images

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.