உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் கத்தாருக்கு இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சென்றதன் பின்னணியில் உள்ள சுவாரசிய காரணங்கள் வெளியாகியுள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நேற்று கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது.
இந்திய அணி இதில் ஒரு அங்கமாக இல்லையென்றாலும் இந்திய இளம்பெண்ணொருவர் கத்தாருக்கு பறந்து சென்றுள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் Shefali Chaurasia. இளம்பெண்ணான இவர் கத்தார் நடத்தும் மிகப்பெரிய கால்பந்து போட்டியில் 13 நிகழ்ச்சிகளை நடத்தும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
amarujala
29 வயதான Shefali ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே பாடும் திறனை கொண்டிருந்தார்.
பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ள Shefali இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.
அவர் கூறுகையில், இது எனக்கு கனவு போல உள்ளது. எங்கள் குழு ஏற்கனவே நவம்பர் 18 முதல் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யத் தொடங்கிவிட்டோம்.
ப்ரொஜெக்டர்களின் உதவியுடன் போட்டிகளுக்கு இடையிலான இடைவெளி நேரத்தில் இந்த நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படும்.
எங்கள் பாடல்கள் ரசிகர்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.
navbharattimes