தனியார் மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் 8 நாட்களில் உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் மருத்துவமனையில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்  8 நாட்களில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெட்டட்டி பகுதியை சேர்ந்தவர்கள் ஜெய்குமார் – அனுசியா தம்பதியினர். கர்ப்பமாக இருந்த அனுசியாவிற்கு கடந்த 10-ம் தேதி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்ததை அடுத்து 2 நாட்களுக்கு பின் அவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

24 மணி நேரமாகியும்  மயக்கம் தெளியாததால், குடும்பத்தினர் அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அனுசியா நேற்று அதிகாலை,சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இதை சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.