சேலம் மாவட்டத்தில் வனப்பகுதியில் ஆண், பெண் சடலம் அழுகிய நிலையில் மீட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் கிலாக்காடு வனப்பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலமும், 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சடலமும் அழுகிய நிலையில் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து வனத்துறையினர் கருமந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கருமந்துறை போலீசார் இருவரின் உடல்களை மீட்டனர். மேலும் இருவரின் உடல் முழுவதும் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவர்கள் யார் என்பது குறித்து அடையாளம் காண முடியவில்லை.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் யாராவது கொலை செய்து விட்டு பிணங்களை இங்கு வீசி வீசி சென்றார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.